பிரதமர் மோடி பிரசாரம் செய்தால் தாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்த நிலையில் திமுக வேட்பாளர்கள் பலரும் அதை வலியுறுத்தி பிரதமருக்கு டுவிட் செய்து வருகின்றனர். மோடியின் பரபரப்புரை தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற தொனியில் அந்த டுவிட்டர் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. 




இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு போட்டி அளித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், ‛மோடியின் பிரசாரம் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலம்,’ என்று கூறியுள்ளார். ‛வெற்றியை கனவில் கூட ஸ்டாலின் எதிர்பார்க்க கூடாது என்றும், திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டது என்றும்,’ கூறிய முருகன், ‛தன் மீதுள்ள குறையை முதலில் ஸ்டாலின் சரி செய்யட்டும்,’ என்றும் அதன் பின் மற்றதை சிந்திக்கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.