அதிமுகவைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக இருந்தனர். அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
இதனையடுத்து அவர்கள் தங்களதுமாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக இருந்த அந்தப் பதவிக்கு திமுக சார்பில் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். எனவே அந்த இடமும் காலியானது.
தொடர்ந்து அந்த பதவியடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள திமுக சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளரான எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எம்.எம். அப்துல்லா, கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனை அப்துல்லாவும், கனிமொழியும், ராஜேஷ்குமாரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு திமுகவினர் பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்