MK Stalin Speech: பா.ஜ.க.-வை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே இல்லாமல் போகும் என கலைஞர் கோட்ட திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். 


மேலும் அவர் பேசுகையில், பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பிவரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க  வேண்டும். பாஜகவை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே இல்லாமல் போகும். இந்தியாவும் இல்லாமல் போகும். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளேன். மீண்டும் பாஜகவை ஆட்சி செய்ய அனுமதித்தால் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டைப் போல் இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக இருப்பது அவசியம் என பேசியுள்ளார். 


திருவாரூரில் உள்ள காட்டூர் கிராமத்தில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு கோட்டத்தை பார்வையிட்டார்.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டத்தில், கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், பழைய புகைப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.


இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ இந்த கலைஞர் கோட்டம், எனது தாய் தயாளு அம்மாள் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்டுள்ளது.  என் தந்தைக்கு தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே இந்த கலைஞர் கோட்டத்தினைப் பார்க்கிறேன்” என தெரிவித்தார்.. 


மேலும் அவர் தனது உரையில், “ நெஞ்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்ககூடிய நிலையில் நான் உங்கள் முன்பு நிற்கிறேன். வான் புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. ஓடிவந்த பெண்ணே கேள் நீ தேடி வந்த கோழை நாடல்ல இது, என 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் போர் பரணி பாடி வந்தாரோ அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது என கூறினார். 


மேலும், “ பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பிவரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க  வேண்டும். பாஜகவை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே இல்லாமல் போகும். இந்தியாவும் இல்லாமல் போகும். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளேன். மீண்டும் பாஜகவை ஆட்சி செய்ய அனுமதித்தால் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டைப் போல் இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக இருப்பது அவசியம்” என பேசினார். 


மேலும், ”வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வேண்டும், அதற்கு முன்னர் ஒற்றுமை வேண்டும் அதன் முன்னோட்டமாகத்தான் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக மாநாடு நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.