விழுப்புரம்: அமைச்சர் மஸ்தான் திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி இன்று (03.03.2023) துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுசுகாதாரத்தினை உறுதி செய்திடவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உயர்ரக சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மேம்படுத்துதல், சிகிச்சைக்கு தேவையான உயர் ரக மருத்துவக்கருவிகளை வழங்குதல், கூடுதல் மருத்துவ கட்டடங்களை கட்டுதல் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், திண்டிவனத்தில், ரூ.60.00 மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டிட உத்தரவிட்டு, மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்கள் தலா 1935.00 ச.மீ பரப்பளவு வீதத்திலும், சாய்தள பரப்பு 700.00 ச.மீ, இணைப்பு பகுதி 95.00 ச.மீ என மொத்தம் 12,475 ச.மீ பரப்பளவில் அமையவுள்ளது. இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களில் 1,000 ச.மீ பரப்பளவில் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டடமும், தரைத்தளத்தில் 166.00 ச.மீ பரப்பளவில் பிணவறைக்கட்டமும், 63.00 ச.மீ பரப்பளவில் எச்.டி அறையும் கட்டப்பட்டவுள்ளது. காத்திருப்பு பகுதி, மருந்தகம், ஓ கதிர், ஆசுஐ ஸ்கேன் மற்றும் ஏவு ஸ்கேன், கோப்புகள் அறை, புறநோயாளிகள் வார்டு, மீட்பு அறை, மருத்துவர் அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, காவலர் விசாரனை பிரிவு, பதிவறை, பணிநேர மருத்துவர் அறை, பணிநேர செவிலியர் அறை, கழிவறையும், முதல் தளத்தில், சிகிச்சை அறை, மருத்துவக்கருவிஅறை, பணிநேர மருத்துவர்கள் அறை, பணிநேர செவிலியர்கள் அறை, தனிமைப்படுத்தப்பட்ட அறை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டாம் தளத்தில், சிகிச்சை அறை, மருத்துவக்கருவிகள் அறை, பணிநேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறை, மருத்துவ வார்டு, சேமிப்பு அறை, சரக்கறை, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, உயர்சார்பு அலகு குழந்தைகள் பிரிவு, உயர்சார்பு அலகு வார்டு, தனிமைப்படுத்த அறை, கழிவறை,


மூன்றாம் தளத்தில், சிகிச்சை அறை, மருத்துவக்கருவிகள் அறை, பணிநேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறை, மருந்தகம், தனிமைப்படுத்தப்பட்ட அறை, அறுவை சிகிச்சைக்குப்பின் வார்டு (குழந்தைகள்), நான்காம் தளத்தில், மீட்பு அறை, நோயாளிகள் கண்காணிப்பு அறை, பணிநேர செவிலியர் அறை, பரிசோதனை அறை, சரக்கறை, கருத்தடை மற்றும் சுத்தம் செய்யும் அறை, அறுவை சிகிச்சை தியேட்டர் 5-எண்கள், கழிவறை, ஐந்தாம் தளத்தில், கருத்தரங்கு அறை, காத்திருப்பு அறை, எம்.ஆர்.டி அறை, அறுவை சிகிச்சை அறை, தீப்புண் சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட அறை கழிவறை போன்ற பல்வேறு பிரிவுகளுடனும், மின்தூக்கி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுடன் மருத்துவமனை கட்டடம் அமையவுள்ளது. இதன் மூலம், இப்பகுதியினை சேர்ந்த பொதுமக்களுக்கு உயர்ரக மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என  தெரிவித்தார்.


இதை தொடர்ந்து திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்...


திண்டிவனம் பேருந்து நிலையம் 18 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சிறுபிள்ளை தனமாக பேசி வருகிறார். இந்திய நாட்டில் கோபாலபுரத்தில் இருந்து இந்திய அரசியலை வழிநடத்தியவர் கலைஞர். இவையெல்லாம் அண்ணாமலை போன்ற சிறுபிள்ளைக்கு தெரியாது. ஆட்சி பொறுப்பேற்ற பின் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தன்னை பற்றி வாக்காளர் மத்தியில் பேசும்போது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என கூறி பிரச்சாரம் செய்தார். ஜனநாயக ரீதியாக வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் ஏற்றுகொள்ள வேண்டும். இதனை ஏற்றுகொள்ள முடியாமல் சிறுபிள்ளை அண்ணாமலை பேச்சு அரைவேக்காடு பேச்சாக இருக்கிறது. கோஸ் விலை பற்றி உரிய காரணம் சொல்லலாம் ,சாக்கு போக்கு சொல்வது அண்ணாமலை ஸ்பெஷல். பொய்யை பயங்கரமா சொல்வது! பயங்கரமா பொய்யை சொல்வது தான் அண்ணாமலை தனித்தன்மை என அமைச்சர் மஸ்தான் விமர்சனம் செய்தார்.