Left , Right என மாறி மாறி கையெழுத்து - அமைச்சர் சேகர்பாபு யாரை விமர்சிக்கிறார்?
பாஜக கையெழுத்து இயக்கத்தில் மீண்டும், மீண்டும் அவர்கள் கட்சிக்காரர்களை வைத்து லெஃப்ட் ரைட் என மாற்றி மாற்றி கையெழுத்து போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அன்னம் தரும் அமுத கரங்கள்
சென்னை கிழக்கு திமுக மாவட்ட கழகம் கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் கௌதமபுரம் குடியிருப்பு பகுதி எஸ்.எஸ்.வி கோவில் முதல் தெரு மற்றும் அயனாவரம் மயிலப்பா தெரு பகுதியில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்வில் தொடர்ந்து 21வது நாளாக அமைச்சர் சேகர்பாபு கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்
முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து 28 வது நாளாக நிகழ்வு நடைபெற்று வருகிறது. 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வயிறார உணவு அருந்தி பயனடைந்துள்ளனர். முதலமைச்சர் அவர்கள் மக்கள் உடல் ஆரோக்கியத்தியோடு நீண்ட ஆயுளோடு வாழ்வாங்கு வாழ்வார்.
திருச்செந்தூர் பக்தர் இறந்த விவகாரம் குறித்து அண்ணாமலை பேசியது குறித்தான கேள்விக்கு,
கூட்ட நெரிசல் இறந்தது என்பது அபாண்டமான பொய். இறந்த பிறகு அவரது மனைவி உடனடியாக காவல் துறையிடம் அளித்த கடிதமும் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு பதிவையும் தெளிவாக வெளியிட்டுள்ளேன். தூங்குபவர்களை எழுப்பலாம் , தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
இறப்பை வைத்து அரசியல் செய்வது அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது. மக்களிடம் பீதியை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கம். முதலமைச்சர் அதற்கு இடம் தர மாட்டார்கள்.
அவர் இறந்தது உடல் நிலை குறைவு காரணமாகத் தான். மீண்டும் மீண்டும் அவர் கோயோபால்ஸ் தத்துவத்தை கையில் எடுக்கிறார். திரும்பத் திரும்ப பொய் கூறினால் உண்மையாகிவிடும் என நம்புகிறார்.
அண்ணாமலையின் கோயபால்ஸ் தத்துவம் தமிழ்நாட்டில் உள்ள இறையன்பர்களிடம் எடுபடாது. தமிழ்நாட்டில் 50 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளது. அவர்கள் அரசியல் செய்வதற்கு ஏற்ப சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவது வழக்கம்.
வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதற்கு கூட அரசு அனுமதி அளித்து உள்ளது. முதல்வர் ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குகிறது. நாட்டு மக்கள் நன்றாக இருக்கிறார்கள்.
மும்மொழி கொள்கை அண்ணாமலை கையெழுத்து இயக்கம் குறித்தான கேள்விக்கு ,
மீண்டும் மீண்டும் அவர்கள் கட்சிக்காரர்களை வைத்து லெஃப்ட் ரைட் என மாற்றி, மாற்றி கையெழுத்து போட்டுக் கொள்ள வேண்டியது தான் என விமர்சித்தார்.