ரூ.2000 பாஸ் - விருப்பம் போல் பயணம்

Continues below advertisement

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணம் செய்யக் கூடிய வகையில் 2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணசீட்டு அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு அறிமுகம் செய்து வைத்து பயணிகளுக்கு மாதாந்திர சலுகை பயணச்சீட்டை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது ; 

Continues below advertisement

ஏற்கனவே மாதாந்திர சலுகை பயணச் சீட்டுகள் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 2000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன் பெற முடியும். ஆன்லைன் மூலமாக டிக்கெட் வாங்குகின்ற திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் கூடுதல் வசதி பொது மக்களுக்கு ஏற்படுத்தி தரப்படும். ஆயிரம் ரூபாய் பாஸில் சாதாரண பேருந்திலும் டீலக்ஸ் பேருந்திலும் பயணம் செய்யலாம். 2000 ரூபாய் பாஸில் ஏசி பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளும் பயணம் செய்யலாம். 

ஆட்டோக்கள் ஸ்டிரைக் - அமைச்சர் பதில்

ஆட்டோ சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிரச்சனைக்கு சமூக தீர்வு காண்போம். குறிப்பிட்ட சில சங்கங்கள் தான் இன்று போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். முடிவு எட்டப்படுகின்ற நேரத்தில் பொதுமக்களுக்கு பாதகமான ஏற்படுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். 

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் குறித்த கேள்விக்கு ;

மிஸ்டு காலில் கட்சி நடத்தும் பாஜக, குழந்தைகளிடம் பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்குகிறார்கள். அது யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அண்ணாமலை படித்தாரா இல்லையா என கேள்வி எழுப்பினார்.