Minister Rajendran: ' திமுகவிற்கு போட்டி அதிமுக மட்டும் தான்' -சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.

"இரண்டாவது இடத்திற்கு மற்ற கட்சிகள் நீயா நானா என்று போட்டி" விஜய் கருத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி.

Continues below advertisement

சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், குறைத்தால் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அடிப்படையில் பாஜக நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை, ரகசியமாக எப்படியாவது நிறைவேற்றிவிடலாம் என்ற நோக்கில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரும் செயல்பட்டு வருவது. தமிழகம் மட்டுமில்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தலையின் மீது தொங்கும் கத்தியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மேலே நேரடியாக தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

Continues below advertisement

தமிழக முதலமைச்சர் இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் வட இந்திய மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் தகவல் கொடுத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் 58 கட்சிகள் பங்கேற்றது. கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு அதன் முயற்சி அடிப்படையில் கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநில முதலமைச்சர்கள் தமிழககூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களின் கட்சி தலைவர்கள் பிரதிநிதித்துவக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகம் மற்றும் வட இந்திய மாநிலங்களில் சமநிலையாக மக்கள் தொகை இருந்தது. தற்பொழுது சமநிலை அல்லாமல் மக்கள் தொகையில் அமைந்திருக்கிறது. பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 20சதவீதம் வரிபகிர்வு நிதியை வாங்கிக்கொண்டு 42 சதவீத சதவீத அளவிற்கு வரிபகிர்வின் அடிப்படையில் மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்திற்கு நூறு ரூபாய் கொடுத்தால் திரும்பவும் 29 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள் அதேபோல் கர்நாடகாவிற்கு 100 ரூபாய் வாங்கிக் கொண்டு 14 ரூபாய் மட்டுமே திரும்ப கொடுக்கிறார்கள். ஆனால் வடமாநிலங்களில் 100 ரூபாய் நிதியை வாங்கிக்கொண்டு 425 ரூபாய் கூடுதலாக வரி பகிர்வை மத்திய அரசு வழங்குகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்திற்கு 100 ரூபாய் வாங்கிக் கொண்டு 922 ரூபாய் வரிபகிர்வு நிதியை கூடுதலாக வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பும், மற்றொரு கண்ணிற்கு வெண்ணையும் வைப்பது போன்று ஏற்றத்தாழ்வுடன் நடந்து கொள்கிறது.வட மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை குறைக்கிறது மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்துகிறது. வடமாநிலங்களில் 80 சதவீதம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் போதும் மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்ற சூழலை உருவாகியுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தமிழகத்தை நாகரீகமற்றவர் என்று என்றெல்லாம் உரையாற்றியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. கடுமையான பாதிப்புக்கு அம்மாநில மக்கள் ஆளாகியுள்ளனர். அந்த மாநிலத்திற்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது.

அங்கு மக்களுடைய பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சென்றிருப்பார்கள். இதனால் தான் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு செல்லாமல் இருக்கிறது. தமிழகம் முழுவதும் தொகுதி மறு வரையறை பிரச்சினைகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையில்லை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரிக்கையை வலிமையாக வடஇந்தியாவில் இருந்து தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நிதி தமிழகத்திற்கு வர வேண்டியதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். கல்வித்துறை, ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவைகளில் நிதி வழங்காமல் உள்ளது வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் அனைத்திலும், ஒரு ஊராட்சியில் இரண்டு இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதி வரையறை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் கூட்டு நடவடிக்கை குழுவில் உள்ள முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக தமிழக முதலமைச்சர் சரியான முடிவு எடுப்பார்கள். இந்தியா கூட்டணி அமைந்திருந்தால் சுங்கச்சாவடி அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்திருக்கும் என்றும் கூறினார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் மீது அக்கறையுடன் இருந்திருக்கிறார்கள். இதனை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதனால் மீண்டும் திமுக ஆட்சி மீண்டும் அமையும்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக, அதிமுக கள்ளஉறவில் இருந்து வருகிறது என்று கூறி வந்தார். தற்போது தமிழக முதல்வர் சொன்னது நிரூபணம் ஆகி உள்ளது.

தேர்தலில் திமுகவிற்கு போட்டி அதிமுக மட்டும் தான். இரண்டாவது இடத்திற்கு மற்ற கட்சிகள் நீயா நானா என்று போட்டி போட்டு வருகிறார்கள் என்று கூறினார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola