சென்னையில் உள்ள ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில், மூலக்கொத்தளத்தில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது,
''தி.மு.க.வுக்குஎதிராகத்திரும்பியிருப்பதால்தான்உடனடியாகத்தன்பேச்சுக்காக ஆ.ராசா மன்னிப்புகேட்கிறார். அவர்கள்கட்சியில்எல்லோரும்அப்படித்தான். நிலச்சுவான்தாரர், பண்ணையார், ஜமீன்தார்போன்றுதான்அவர்கள்அரசியல்நடத்துகின்றனர். மக்கள்அரசியலை தி.மு.க. செய்யவில்லை.
ராதாரவிக்குஒருநியாயம், ஆ.ராசாவுக்குஒருநியாயமா? ஆ.ராசா மீதுநடவடிக்கைஎடுத்தால்தான் தி.மு.க. மீதுமக்களுக்குநல்லகருத்துஇருக்கும். ஆ.ராசா மீதுநடவடிக்கைஎடுக்கவில்லையென்றால், தி.மு.க. சொல்லித்தான் ஆ.ராசா பேசினார்என்றகருத்துஇருக்கும். தான்பேசியதைத்திரித்துசமூகவலைதளங்களில்உலாவிட்டிருந்தால் ஆ.ராசா மன்னிப்புகேட்கவேண்டியஅவசியமில்லையே? அப்போதுபேசியதுஉண்மைதானே”
இவ்வாறு அவர் கூறினார். நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து பேசிய கருத்து, சர்ச்சைக்கு உள்ளாகியதை தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார்.
