சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் நேற்று காலை நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பாமக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் மானிய கோரிக்கையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர்க்கு மேல்மட்ட பாலத்துடன் கூடிய சாலையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பேரவையில் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார்
மானிய கோரிக்கை விவாதத்தில் பாமக எம்எல்ஏ சிவக்குமார் எழுப்பிய கேள்விகள்: இந்த நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.20,423 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல என பாமக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் இப்போது 65 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில், 17 சுங்கச்சாவடிகள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறுவப்பட்டுள்ளது என குற்றசாட்டை முன்வைத்தர். தமிழக அரசு சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும். எனது தொகுதியான மயிலத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். மயிலம் தொகுதியில் நகராட்சி, பேரூராட்சிகள் இல்லை. மயிலத்தில் அரசு கலை கல்லூரி அமைத்துதர வேண்டும். தொகுதியின் மையப்பகுதியில் தீயணைப்பு நிலையமும், காவல் நிலையமும் அமைத்துதர வேண்டும்”என்றார்.
தொடர்ந்து வலியுறுத்துவோம்
இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை குறைக்க கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 27 கி.மீ. தூரத்துக்கு மேல்மட்ட சாலை அமைக்க நாம் திட்டமிட்டோம். ஆனால், மத்திய அரசு 6 வழி பசுமைச் சாலையாக அமைக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறது. இருந்தாலும், மேல்மட்ட சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.