மதிமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில்  வைகோ அவர்களின் துணைவியார் ரேணுகா தேவி, மகளிர் அணி மாநில செயலாளர் மல்லிகா தயாளன், துணை பொது செயலாளர்கள் மல்லை சத்யா, டாக்டர் ரொகையா கழக அமைப்புச் செயலாளர் வந்திய தேவன் உள்ளிட்ட கழகத்தின் மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சிக்கு முன்பாக தாயகத்திற்கு வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது துணைவி யாருக்கு மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..


தொடர்ந்து பெண் குழந்தைகளின் திருக்குறள், தமிழ் எழுத்துக்கள் ஒப்பி வித்தல், பரதநாட்டியம் உள்ளிட்ட பெண் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன


நிகழ்வைத் தொடர்ந்து மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமெரிக்காவில் முதன் முதலாக பெண்கள் செய்த புரட்சி நாளான இன்று உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்படுவதாக கூறினார் 


திராவிடத்திற்கு ஆபத்தாக தற்போதைய இந்துத்துவா சக்திகள் பாஜக வளர்ந்து வருவதாகிறது. எனவே தான் திராவிடத்தை காப்பதற்காக மறுமலர்ச்சி திமுக என்றென்றும் திமுகவோடு துணை நிற்கும் இமயமலையை கூட நகர்த்தி விடலாம் ஆனால் திமுகவை என்றும் அழித்து விட முடியாது  


புதியதாக கட்சியை தொடங்கியவர்கள் முல்லைப் பெரியாறு நியூட்ரினோ ஸ்டெர்லைட் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் போன்ற மக்கள் நல பிரச்சனைகள் ஏதாவது ஒரு பிரச்சனைக்காவது குரல் கொடுத்தது உண்டா ?


இப்படிப்பட்டவர்கள் எடுத்த எடுப்பிலேயே முதல்வர் ஆகிவிட வேண்டும் என பேசி வருகிறார் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை  மறைமுகமாக சாடினார் .



அண்ணாமலை என்னை ஓய்வெடுக்க சொல்கிறார் அவருக்கு என் உடல் நலன் மேல் அக்கறை இருக்கிறது அதனால் அவர் அப்படி சொல்லி இருக்கிறார்.