மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு அந்தக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. மதிமுகவின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், துரை வையாபுரியின் பொறுப்பை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மதிமுகவின் 28 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அரசியல் நடவடிக்கை, கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நீட் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் தொடர்பாக அரசியல் தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றனர். முன்னதாக, வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு 3 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.