மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி பேசினர்.


காங்கிரசுக்கு பாடம் புகட்டிய ஹரியானா மக்கள் 


அதனை தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா கூறியதாவது; எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசியபோது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு எப்போது இடஒதுக்கீடு அவசியமில்லை என்று நினைக்கின்றோமோ அப்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவோம் என்று பேசியுள்ளார்.  இதேபோல் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பேசியுள்ளனர். காங்கிரஸ் ரத்தத்தில் இது ஊறிப்போனது என்பதை ஹரியானா மக்கள் புரிந்துகொண்டு காங்கிரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டியுள்ளனர். 




ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக முதலிடம்  


2019 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 40 எம்எல்.ஏக்கள் ஜெயித்து கூட்டணி ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அருதி பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜகவிற்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. ஜம்முகாஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியால்  பெரும்பான்மை பெற்றுள்ளனர். ஆனால் மிக அதிகமான வாக்குகள் பெற்று முதல் இடத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி.  370ஐ ரத்து செய்தது சரி என்பதை மக்கள் நிருபித்து பாரதிய ஜனதா கட்சிவிற்கு வாக்களித்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


திருமாவளவன் சொன்னதை பேசும் ஆதவ் அர்ஜுனா


திமுகவை எதிர்த்து போராடும் கூட்டணி கட்சிகள், கூட்டணியை தொடர்வதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ளதா? என்ற பதில் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, உள்ளுக்குள் அதிக சீட்டுக்களை  திருமாவளவன் பெறுவதற்காக திருமாவளவன் பேச சொன்னதை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜினா பேசியிருக்கிறார். அழுத்தம் கொடுக்கும் யுக்தியை கையாண்டு வருகின்றனர். கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் ரூமுக்குள் போனபோது ஸ்டாலினிடம் திருமாவளவன் என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெரியாது. 




விதவைகளை உற்பத்தி செய்யும் தமிழக அரசு


சர்வசிக்‌ஷா அபியானில் எவ்வளவு பணம் வரவேண்டும். 2023-ல் அன்றைய தலைமை செயலர் சிவதாஸ்மீனா திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதாக கூறினார். ஆனால் இதுநாள் வரை கையெழுத்து போடவில்லை. கையெழுத்து போடுங்கள் மறுநாள் காலையில் காசு என்றார். மேலும், அதிக விதவைகள் இருக்கும் மாநிலம் தமிழகம் என்று எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். விதவைகளை உற்பத்தி செய்வது அரசு தான்.


டாஸ்மாக்கை வைத்து விதவைகளை அதிகமாக பெருக்கி கொண்டுள்ளது தமிழக அரசு. சாராய விற்பனையில் கடந்த ஆண்டு 48 ஆயிரத்து 700 கோடி இலக்கு. இந்த ஆண்டு 54 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயித்துள்ளனர். அந்த பணத்தை வைத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதுதானே. யாரை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர்? ஆசிரியர்கள் படித்தவர்கள் உங்கள் பம்மாத்தை அவர்கள் நம்பமாட்டார்கள். 


இந்த அரசு இன்னும் தொடர என்ன உரிமை இருக்கிறது?


கடந்த தேர்தலில் திருபுராவில் எங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. 5 ஆண்டில் 46 எம்.எல்.ஏ. அதுதான் எங்கள் அனுபவம். இன்று இந்த அரசாங்கம் ஏர் ஷோவிற்கு வந்த மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வக்கில்லாத அரசாங்கம். 5 பேர் இறந்துள்ளனர், 250 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இந்த அரசு இருப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். விஷசாராய சாவுகள் உள்ள இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எரிவார்கள் என்று நான் நம்புகின்றேன் என்றார்.