மகாரஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024:
மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது, கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா மாநிலமானது, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால், யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு தேசிய அளவில் எழுந்துள்ளது.
இந்த தருணத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பானது, பெரும்பாலான நிறுவனங்கள் கருத்து கணிப்பானது , மீண்டும் பாஜக கூட்டணியே வெற்றி பெரும் கணித்துள்ளன. ஒருவேளை கருத்து கணிப்புகள் உண்மையானால், பாஜக கூட்டணியில் யார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பாஜக கூட்டணியிடையே எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவின் முன்னாள் முதலமைச்சரான தேவிந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவாரா அல்லது சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவே , மீண்டும் முதலமைச்சராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே கிங் ஆவாரா?
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே கிங் ஆவாரா அல்லது கிங் மேக்கராக ஆவாரா என்பது குறித்து, ஷிண்டே தரப்பு சிவசேனா என்ன தெரிவித்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே, 2022ல் மகாராஷ்டிரா அரசியலில் மிக முக்கியமான தலைவராக உருவெடுத்தார், அவர் சிவசேனா கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவுடன் கைகோர்த்து முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, பாஜக கூட்டணியில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
”ஷிண்டே முதலமைச்சராக வேண்டும் “
இதுகுறித்து ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், “ தங்களது கூட்டணி வெற்றி பெற்றால், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக தொடர்ந்தால்தான் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். மேலும் , இந்த முடிவுதான் உத்தவ் தாக்கரே மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணியை மாநிலத்தில் வளர்ச்சி பெறுவதை தடுக்கும்.
"ஷிண்டேவை முதல்வராக்கவில்லை என்றால், உத்தவ் மீண்டும் வளர்ச்சியடைவார். எனவே, உத்தவ் தாக்கரேவை, பாஜக உண்மையிலேயே கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், ஷிண்டே சிவசேனாவை உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக அவசியம்", அதற்கு, ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ஷிண்டே தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மகாயுதி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வரலாம் என்ற ஊகங்களும் பரவியுள்ளன. இருப்பினும், மக்களைவைத் தேர்தலைப் போலவே, பாஜகவை விட சிவசேனாவின் ஸ்டிரைக் ரேட் அதிகமாக இருந்தால், பாஜகவின் பட்னாவிஸ் முதலமைச்சராக முன்னிலைப்படுத்துவது கடினமாக இருக்கும்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே யார் முன்னிலை பெறுவார்கள் என்ற போட்டியும் இருப்பதை பார்க்க முடிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்பு முடிவுகளானது , கணிக்க முடியாதவையாகவே இருக்கிறது. இந்நிலையில், நாளை தெரிந்துவிடும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று, அதுவரை காத்திருப்போம்.