தருமபுரியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்டர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் பாரத ரத்னா எம்ஜிஆரின் சட்ட விதிகளை திருத்தம் செய்யக்கூடாது. ஜெயலலிதா மட்டுமே கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவை மீட்டெடுத்து ஓபிஎஸ் தலைமையில் அணிவகுப்பம். அதிமுகவை அழிக்க நினைக்கும் துரோகி எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அறிவிப்புகளை உடனே நிறைவேற்ற வேண்டும். அனைத்து மகளிருக்கும் ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்க்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அன்வர் ராஜா, கே.சி.பழனிசாமி, சைதை துரைசாம என அனைவரும் ஒன்றிணை வேண்டும். அப்பொழுதுதான் திமுகவை வீழ்த்த முடியும். இதுதான் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவு. ஆனால் எடப்பாடி பழனிசாமி, தான் மட்டும் தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். தனக்கே கட்சியை உரிதாக்கி கொள்ள வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். அதற்கு நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டு நாயகன் என ஓபிஎஸ்-ஐ புகழ் பாடியவர் எடப்பாடி பழனிசாமி தான். அதை வேண்டுமென்றால் திரும்பும் நாங்கள் ஒரு முறை வீடியோவை போட்டு காட்டுவோம். எடப்பாடி பழனிசாமி சாதாரண அமைச்சராக இருந்த பொழுது நன்றாக இருந்தார். முதலமைச்சரான பிறகு புத்தி பேதளித்துவிட்டது. சட்டம், நீதி, மக்கள் என அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இன்னும் 20 நாட்களில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும். மீண்டும் அனைவரும் ஒன்றிணைவோம். தமகழ்நாட்டில் மீண்டும் ஆட்சியமைப்போம். முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது சொந்த தொகுதியான மன்னார்குடி தொகுதியில் போட்டியிடட்டும். அங்கு போட்டியிட்டால் அவர் டெபாசிட்ட இழப்பார். எங்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை. அவர் திவாகரன் வீட்டில் வேலை செய்தவர். திமுகவில் இருந்து, அதிமுக வந்தவர்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்