NO CAA என வாசலில் கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக , காயத்திரி திமுக -பாகிஸ்தான் சேர்ந்து போட்ட கோலம் என்ற தலைப்பில் யூடியூபர் மாரிதாஸ்  வீடியோ வெளியிட்டு  திமுகவை களங்கப்படுத்தி, திமுக மீது அவதூறு பரப்பி உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி திமுக மாணவர் பிரிவை சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி JM3  நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி, மாரிதாஸ் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், " என் மீது உமரி சங்கர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை.  எனவே என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார்.
  



 

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது மாரிதாஸ் தரப்பில், "மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர் கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசி உள்ளார்.  உமரிசங்கர் குறித்து ஏதும் பேசவில்லை. உமரி சங்கருக்கு இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எந்த முகாந்திமும் இல்லை.  எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. இதையடுத்து  நீதிபதி வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீது பதியப்பபட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்