அதிமுக சிதறு தேங்காய் போல சிதறிய காலமும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து ஆட்சியை பிடித்த காலமும் உண்டு. - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

வேலைவாய்ப்பை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்
 
மதுரையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி, மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் தொண்டர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தபால் மூலம் அழைப்பு விடுத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகளாகியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திமுக அரசு உருவாக்கவில்லை. திமுக அரசு கடந்த 4.5 ஆண்டுகளில் இளைஞர்கள்களுக்கு கொடுத்துள்ள வேலைவாய்ப்பை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
 
அதிமுக தலைவர்கள் திமுக வில் இணைகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு
 
அதிமுக - வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் செல்பவர்களை பற்றி பெரிது படுத்த வேண்டியது இல்லை. அதிமுக காணாத தோல்வியும் கிடையாது, காணாத வெற்றியும் கிடையாது. அதிமுக சிதறு தேங்காய் போல சிதறிய காலமும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து ஆட்சியை பிடித்த காலமும் உண்டு. அதிமுக வுக்கு உயிரோட்டம் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி உயிரைக் கொடுத்து உழைத்து வருகிறார்.
 
FAILURE மாடல்" ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தோலுரித்துக் காட்டி வருகிறார்
 
சுதந்திர தின விழா முதலமைச்சர் உரை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லாமல் வெறும் " உப்புக்கு சப்பாக" இருந்தது. "FAILURE மாடல்" ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தோலுரித்துக் காட்டி வருகிறார். முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஏற்பதற்கு பதிலாக இங்குள்ள நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யலாம். தொழில்துறையில் கள நிலவரம் முதலமைச்சருக்கு தெரிகிறதா? இல்லையா?
 
தி.மு.க., கூட்டணியை உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்ற திருமாவளவனின் கருத்துக்கு
 
அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் மிகப்பெரிய அறிவு ஜீவிகள் மக்கள் மீது பற்றுள்ளவர்கள், மக்களை நேசிப்பவர்கள். யாரோடு கூட்டணி சேர வேண்டும் என்று ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்த கணக்குக்கு ஏற்ப பாடம் எடுப்பார்கள்.
அதிமுக வில் சோதனைகள் வருவதை காலம் காலமாக பார்த்து வருகிறோம். 
 
விஜய், OPS அதிமுக வில் வரவுள்ளார்களா? என்ற கேள்விக்கு
 
எனக்கு ஜோசியம் தெரியாது. "ALWAYS WAIT AND SEE" என்றார்.