பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அரசியல் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாடு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்  கலந்ர்து கொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டில் விரைவில் தாமரை மலரும் என கூறியுள்ளார். மேலும், மாநில கட்சிகாள் எல்லாம் குடுபக் கட்சிகள் ஆகிவிட்டன எனவும் அவர் கூறியுள்ளார். 


கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழா  குந்தாரப்பள்ளியில் நடைப்பெற்றது. இதில், கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி இல்லாத 9 மாவட்ட அலுவகலங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஜே.பி. நட்டா,  வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் வந்து விட்டன. திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக  மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. 



இதற்கு முக்கிய காரணம், பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டது தான். தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்து கட்சியை வளர்த்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் தாமரை விரைவில் மலர்ந்தே தீரும் என பேசியுள்ளார். மேலும்,  பாஜகவால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும். 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பெரும்பாலான இடங்களில்  வெற்றி பெறும். தமிழ் மொழி,  தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மக்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே பிரதமர் மோடி பேசுகிறார்.  பாரதிய ஜனதா ஆட்சியில் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூபாய் 31ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த  60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள  மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் இருக்கிறது.


ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. என்றாலே குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து தான். தற்போது தி.மு.க. குடும்ப அரசியல் என்பதற்கு சான்று, முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை, என்னவெல்லாம் நடக்கப்போகிறது எனத் தெரியவில்லை. வாரிசு அரசியலால் மாநில கட்சிகளின் நிலை தொடர்ந்து சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாரதிய ஜனதாவால் மட்டுமே தர முடியும் என பேசியுள்ளார்.