தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குளச்சல் நகராட்சியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது


 


 




 

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா, பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,காங்கிரஸ் எம்.பி,விஜய் வசந்த் எம்எல்ஏக்கள் பிறின்ஸ்,விஜயதாரணி மற்றும் திமுக கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், இந்த நாட்டில் ஒரு ஆளுநர் யாருடைய உப்பையோ தின்றவன் இங்கே வந்து கொண்டு நின்று அழிச்சாட்டியம் செய்கிறார். அரசியல் செய்கிறார் ஆர்.எஸ்.எஸ் பண்ணையில் வளர்ந்த முதலைகள் ஆளுநர் என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை அசைத்து பார்க்க நினைத்தால் நான் ஆளுநருக்கு சொல்கிறேன் நீ சொந்த ஊருக்கு குடி போக வேண்டும் என்பதை ஆளுநருக்கு குளச்சலில் எச்சரிக்கிறேன் யாரிடத்தில் விளையாடுகிறாய்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- குடி குடியை கெடுக்கும்: தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை கொன்ற கணவன் கைது



 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election | காஞ்சியில் அதிமுக வேட்பாளர் தற்கொலை....! நீதிகேட்டு அதிமுகவினர் சாலை மறியல்....!

 


பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடித்ததின் பிராயசித்தமாக அமலாக்கத்துறை சிபிஐ வீட்டிற்கு வரும் என்று அஞ்சி அதிமுக என்ற கட்சியை பிஜேபி என்ற கட்சிக்கு குறைந்த குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள் ஆகவே அவர்களை நிராகரிக்க வேண்டும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக உள்ளது என்றும், தமிழ்நாடு பெரியாரின் நந்தவனம், அறிஞர் அண்ணாவின் திருத்தலம் அசைக்க முடியாத ஆஸ்பெஸ்டாஸ் கோட்டை இங்கே நுழைந்து விடலாம் என்று அண்ணாமலை என்ற ஆட்டுக்குட்டியை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டுக் குட்டிக்கு எங்கே மேய வேண்டும் என்ற விபரமே தெரியவில்லை என்றும் பேசினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மோடி ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து