நாளை மாலை 6 மணிக்கு உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் வீடுகளில் இருந்தபடி கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

முருக பக்தர் மாநாட்டில் எல்.முருகன்
 
மதுரை பாண்டிக் கோயில் அருகே உள்ள மைதான திடல் பகுதியில் நாளை மாலை நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டு பகுதியில் அமைக்கப்பட்ட அறுபடை வீடு அருட்காட்சியகத்திற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாநாட்டு திடலில் முன்னேற்பாடுகள் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர். செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது...” முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  10லட்சம் பேரும் வருகை தர உள்ளனர்.
 
அதிர்வலையையும் ஏற்படுத்துகின்ற மாநாடு
 
முருக பக்தர்கள் சங்கமிக்கும் மிகப்பெரிய மாநாடு முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு இங்கு கந்த சஷ்டி கவசம் இங்குள்ள அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடவிருக்கிறோம். அதேபோன்று  உலகம் முழுவதும் இருக்கிற அனைத்து முருக பக்தர்களும் ஏதாவது ஒரு காரணத்தினால் வர முடியாமல் வீட்டில் இருந்தால் வீடுகளில் இருந்து கொண்டு கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டுமென மாநாட்டு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கந்த சஷ்டி கவசத்திற்கு அப்படி ஒரு பவர். கருப்பர் கூட்டத்திற்கு வெற்றி வேல் யாத்திரை மூலம் சரியான தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அதேபோல் இப்போது முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்துகின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும்.
 
தமிழக மக்களிடம் எப்படி மாற்றத்தை அமையும் என்ற கேள்விக்கு?
 
இந்த மாநாடு முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இந்த மாநாடு உடைய வெளிப்பாடு இருக்கும். உளுந்தூர்பேட்டையில் இருந்து வாகனங்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன மாலை நடைபெறக்கூடிய மாநாட்டிற்கு தற்போது வருகை தர தொடங்கியிருக்கிறார்கள். இது ஒரு மக்கள் சுனாமி என்று சொல்லும் அளவிற்கு இந்த மாநாடு இருக்கும். இந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலை அப்படியே புரட்டிப்படும் மாநாடாக இருக்கும். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பக்தர்களின் வருகை தமிழக ஆட்சியாளர்கள் இடத்தில் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவிற்கு மிக பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது 
 
 சமூகவலைத்தளத்தில் முருக பக்தர்கள் 
 
சமூக வலைதளத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை பற்றி நெகட்டிவா எழுதுபவர்களை விட பாசிட்டிவாக எழுதுபவர்கள் தான் அதிகம். இந்த மாநாடு மிகப்பெரிய மாநாடு யாரும் எதிர் பார்க்காத மாநாடாக இந்த மாநாடு அமையும். நான் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் செல்ல தடை விதித்தனர். பல்வேறு இடைஞ்சல்களை செய்து வருகிறார்கள். எங்கள் மாநாட்டை தடுக்க ரூம் போட்டு யோசிப்பாங்கள் என்பது போல ஆட்சியாளர்கள் காவல்துறை பல்வேறு யோசனைகளை செய்துவருகின்றனர்.
 
 சங்கிகள் தான் எங்களுக்கு எதிரானவர்கள் என்ற அமிர் பேசியது குறித்த கேள்விக்கு?
 
நாம் ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த  மாநாட்டை பற்றி வேறொருவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநாட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர். முருக பக்தர்கள் மாநாடு பற்றி பேசக்கூடாது. தானாக முன்வந்து சேமிப்பை எல்லாம் கொடுத்து முருக பக்தர்கள் கூடுவதை, இழிவு சொல்வதை முருக பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.