Karur Stampede TVK Vijay: கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

Continues below advertisement


கரூர் கூட்ட நெரிசல் - 39 பேர் பலி


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இரவோடு இரவாக கரூர் விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது மாநில வரலாற்றில், ஒரு அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்ததில்லை, எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் ஒருபோதும் நடக்கக்கூடாது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்” என்றும் பதிலளித்தார்.


தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்:



  • அதிகப்படியான நெரிசல், தண்ணீர் கூட அருந்தாமல் நீண்ட நேரம் காத்திருந்தது போன்ற காரணத்தால் பலர் அடுத்தடுத்து கூட்டத்தில் மயங்கி விழுந்தனர்.

  • பரப்புரையில் மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் பலர் காணாமல் போனதாக கூறப்பட்டதால் பரபரப்பு

  • தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்

  • மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்

  • பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கரூர் அரசு மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்

  • சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூருக்கு விரைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்

  • திருச்சியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கரூர் விரைந்தார்

  • பலியானோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன

  • கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது

  • கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் என செந்தில்பாலாஜி விளக்கம்

  • கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

  • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

  • கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • துபாய் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துகொண்டு உடனடியாக சென்னை திரும்புகிறார்

  • கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு உதவி எண்கள் அறிவிப்பு - 04324 256306, 7010806322

  • தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு

  • தனி விமானம் மூலம் இரவோடு இரவாக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் அரசு மருத்துவமனையை அடைந்தார்

  • உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

  • சிகிச்சை பெற்று வருபவர்களையும் நலம் விசாரித்ததோடு, தேவையான சிகிச்சைகளை வழங்கவும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்

  • “அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” - முதலமைச்சர் ஸ்டாலின்


இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரே இரவில் எடுத்து, தமிழக அரசு முழு வேகத்தில் இயங்கியுள்ளது குறிப்பிடத்தகக்து. அரசின் துரித நடவடிக்கைகளுக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தோர் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, தாமதமின்றி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.