TN Govt On Karur Stampede: தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது என்ன நடந்தது என்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளார்களை இன்று (செப்டம்பர் 30) ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் தமிழக அரசு சார்பாக வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டனர்.
- தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவது ஆற்றுப்பாலமும்,பெட்ரோல் பங்கும் உள்ளது. இரண்டாவதாக உழவர் சந்தை மிக குறுகிய இடம் என்பதால் 5 ஆயிரம் பேட் மட்டுமே திரள முடியும். அதனால் வேலுச்சாமிபுரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறிய போது அதை தவெகவினர் ஏற்றுக்கொண்டனர்.
- 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தவெகவினர் தரப்பில் கடிதம் எழுதியிருந்தர்கள். முந்தைய கூட்டங்களை வைத்து 20 ஆயிரம் பேர் வருவார்கள் என்பதை கணித்து அதற்கேற்றார் போல் பாதுகாப்பு போடப்பட்டது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
- விஜயின் பிரச்சார வாகனம் கூட்டத்திற்குள் வரமுடியாத அளவிற்கு இருந்ததால் போலீசார் கூட்டத்தை விலக்கினர். ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என டி.எஸ்.பி சொல்லியும் அதை அவர்கள் கேட்கவில்லை
- ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் கழற்றி சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. தவெக துண்டு அணிந்தவர்கள் தான் மின்சாரத்தை ஆப் செய்தனர்
- காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால்தான் விஜய் காவல்துறைக்கு நன்றி சொன்னார். காவல்துறை இல்லையென்றால் இங்கே வந்திருக்க முடியாது என்று விஜய் கூறி இருந்தது இதற்கு உதாரணம். போலீசார் தடியடி நடத்தவில்லை.
- வாகனம் செல்ல, ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாத போது, கூட்டத்தை நகர்த்தி, போலீசார் விரட்டி மட்டுமே விட்டனர். தடியடி எல்லாம் நடத்தவில்லை. ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்பு வந்தது. அதற்கான ஆதாரங்கள் என்று ஆம்புலன்ஸ் கால் ரெக்கார்டிங் ஆதாரங்களை காட்டினார் அமுதா ஐஏஎஸ்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் போதே அவரை பின்தொடர்ந்து பெரிய கூட்டமும் வந்தது.
- 7 ஆம்புலன்சுகள் அவர்களின் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். அவர்களின் கட்சி சார்பில் வந்த ஆம்புலன்ஸ்கள் போதவில்லை என்ற பின்புதான் 108 ஆம்புலன்சுகள் வந்தன.
- பிரேத பரிசோதனை குடும்பத்தினர் கோரிக்கையின் பெயரில் செய்யப்பட்டது.
- கூடுதல் மருத்துவர்களை வரவழைத்துதான் பிரேத பரிசோதனை மேற்கொண்டோம்.