கரூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் "மாற்றத்திற்கான மாநாடு" நிகழ்ச்சிக்கு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கூடியதால் பரபரப்பு  ஏற்பட்டது.




கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் "மாற்றத்திற்க்கான மாநாடு" நடைபெறுவதை ஒட்டி பாஜக சார்பில்  பந்தல்கள் அமைப்பதற்காக பொருட்களை உள்ளே எடுத்து வந்த போது, திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் யாரும் உள்ளே பந்தல் அமைக்க கூடாது என்று அப்பகுதியில் ஒன்று கூடினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் கோர்ட் அனுமதி உடன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினர். திமுக சார்பில் ஜூலை 1ஆம் தேதி மட்டும் தான் கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. பந்தல் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


 



 


பாஜக சார்பில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடாக பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகம்   திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் பூட்டி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் திறந்து விட்டனர். அதனால் மாநாட்டு பணிகள் நடைபெற்று வந்தது. எனவே மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து  விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் பாஜக சேலம் கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மைதானத்திற்குள் உள்ளனர். சம்பவ இடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.