தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் திங்கட்கிழமையில் நடைபெற்று வரும் மக்கள் குறதிர்க்கு நாள் கூட்டத்தில் வாரம் தோறும் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது தெரு பிரச்சனை, ஊர் அடிப்படை பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை குடிநீர் பொது கழிப்பிடம் சாக்கடை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகார் மனு வழங்கி பிரச்சனையை கூறிய தீர்வுகளை கண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சீமான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி கடந்த 11.07.2024 -ம் தேதி அவதூறாக பாடல் பாடிய சாட்டை முருகன் கைது செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை முருகன் பாடிய அதே பாடலை நான் பாடுகிறேன் என்னை கைது செய்து பாருங்கள் என சவால் விடுத்தார்.
மேலும், கலைஞரை இழிவுபடுத்தும் நோக்கில், சண்டாளன் என்ற கீழ் ஜாதியை சேர்ந்தவர் என்று பொருள்படும் வகையில் வார்த்தையை பயன்படுத்தி கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் அவதூறாக பேசிய அவர், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என சவால் எடுத்துள்ளார். மேலும், 04.08.2024-ம் தேதி அன்று மீண்டும் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சதிகாரன் என்று கரு நாகம் என்றும் காதகன் என்றும் அவதூறு பேசி உள்ளார் அவரது பேச்சு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இது வேதனை அளிக்கிறது.
எனவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சீமான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.