புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்களின் முகம் உறுமுவது போல வைக்கப்பட்டது தொடர்பான சர்ச்சைக்கு, காஷ்மீர் ஃபைல்ஸ் நடிகர் அனுபம் கெர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


அனுபம் கெர்


சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்ற நடிகர் அனுபம் கெர், இந்தியில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புத் திறனைப் பாராட்டி, அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் இந்த சிங்க முக சர்ச்சை குறித்து தனது ஆக்ரோஷமான கருத்தை கூறி உள்ளார்.






தேவைப்பட்டால் கடிக்கும்


இது குறித்து அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார், “சிங்கத்திற்கு பற்கள் இருந்தால், அது நிச்சயமாக அவற்றைக் காண்பிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது சுதந்திர இந்தியாவின் சிங்கம். தேவைப்பட்டால், கடிக்கும்." என்று எழுதி பிரதான் மந்திரி சங்க்ரஹாலயாவில் எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.


தொடர்புடைய செயதிகள்: Rasi Palan Today, 15 July 2022 : கன்னிக்கு நிம்மதி...! விருச்சிகத்துக்கு அலைச்சல்..! அப்போ உங்க ராசிக்கு எப்படி..?


சிங்க முகம் சர்ச்சை


பாராளுமன்ற கட்டிடத்தின் மேல் உள்ள சின்னத்தில் உள்ள சிங்கம் பற்களை காட்டிக்கொண்டு உருமுவதுபோல இருப்பதாக பல எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டியதால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அசல் சிங்கங்களை விட இந்த சிங்கங்கள் மிகவும் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது என்றும் கூறினர்.



வடிவமைப்பாளர் விளக்கம்


இருப்பினும், சின்னத்தை வடிவமைத்த கலைஞர்கள் சுனில் தியோர் மற்றும் ரோமியல் மோசஸ் ஆகியோர் அசல் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளனர். சுனில் தியோர் பேசுகையில், "சிங்கங்கள் ஆக்ரோஷமாக காணப்படுவதற்கு காரணம் அதனை நாம் பார்க்கும் கோணம் தான் காரணம், நாம் கீழிருந்து பார்ப்பதால் அவற்றின் பற்கள் கோரமாக காட்சி அளிக்கிறது" என்று விளக்கம் அளித்தார். ஆனால் அனுபம் கெர் இதற்கு வேறு மாதிரியான விளக்கம் கொடுத்திருப்பது பலரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.


இந்த அனுபம் கெர் நடிப்பில் இந்த வருடம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.