மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது . 2,050 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,746 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் மூலம் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி கண்ணீரும் புதிய பாசன வாய் காலில் வினாடிக்கு, 440 கன அடி வரை திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 68.74 அடி யாக இருந்தது. அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வந்தது.
கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு நான்கு கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 15 .38 அடியாக இருந்தது . நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்