கர்நாடக மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு பாஜக எம்.எல்.ஏ வாக்களித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக மாநிலங்களவை தேர்தலில், பாஜக எம்.எல்.ஏ எஸ்.டி. சோம சங்கர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்:
கர்நாடக மாநிலத்திலிருந்து 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவையில் 135 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ( இதில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றும் ஒருவர் சபாநாயகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ), 66 எம்எல்ஏக்கள் பாஜக கட்சிக்கும், 19 எம்எல்ஏக்கள் ஜேடி(எஸ்)க்கும் மற்றும் இதர 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ராஜ்யசபா உறுப்பினர்களை ( எம்.பி ), சட்டப்பேரவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை 45 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தால், ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக முடியும். 4 உறுப்பினர்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று, மூன்று ராஜய் சபா இடங்களைப் பெறுவதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
பாஜக மற்றும் கூட்டணியினர் அதிர்ச்சி:
பாஜக ஒரு இடத்தை பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஜேடிஎஸ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்திய நிலையில், பாஜகவின் இதர வாக்குகள் மற்றும் சுயேட்சை வாக்குகளை பெற திட்டமிட்டது. ஆனால், கூட்டணி கட்சியான ஜேடி(எஸ்) வேட்பாளருக்கு பா.ஜ.க.வினர் வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் வெற்றி பெறுவது சிக்கலாகியுள்ளது. ஆனால் பாஜகவினரே காங்கிரசுக்கு வாக்களித்தது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜகவினரே அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என பாஜகவினர் சிலர் கூறிவந்த நிலையில், பாஜகவினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
உறுதி செய்த பாஜக கொறடா:
பாஜக எம்.எல்.ஏ எஸ்.டி. சோம சங்கர், காங்கிரசுக்கு வாக்களித்ததை பாஜக கொறடாவான தோடண்ண கவுடா உறுதிப்படுத்தினார் .
இதுகுறித்து, பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், இதுகுறித்து எனக்கு தெரியாது, ஆனால், பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ்-க்கு ஆதரவாக பாஜகவினர் வாக்களித்திருப்பது, கூட்டணி கட்சியான ஜேடி(எஸ்)க்கு ஆதரவு அளிக்க விரும்பவில்லை என தெரிகிறது என தெரிவித்தார்.
இது பாஜக மற்றும் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம கட்சியினருடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.