தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியபோது,

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டது எனக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது.






 


விரைவில் பட்டியல்:


திமுக தலைமையில் இருக்கும் எங்களது கூட்டணி 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  இந்தியாவைச் சார்ந்த ஊடகங்கள் பல ஊழல்களை மறைக்கிறது.  இப்பொழுது புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. வருமானவரித்துறை ஆய்வுகளை வைத்து பல  தொழிலதிபர்களிடமிருந்து கோடிகணக்கில் பாஜக நன்கொடை பெற்றுள்ளது. மிக விரைவில் அதற்கான பட்டியல் வெளிவரும்.  ஊழலை செய்யவில்லை என கூறிய பாஜக எவ்வளவு வாங்கியுள்ளது? என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.


பிரதமரை வரவேற்கிறோம்:


பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம். அந்த வகையில் மோடியையும் நாங்கள் வரவேற்கிறோம். திருப்பூரில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது, திருப்பூரில் நீண்ட நாட்களாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.  இதுவரையில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை போல் காலதாமதம் செய்யாமல், கட்டுவாரா என எதிர்பார்ப்போம். 


திருப்பூரில் பாஜகவிற்கு ஆதரவு இருக்கிறது என்ற பெயரில் இதை செய்கிறார்கள்.  கோடிக்கணக்கில் குதிரை பேரம் செய்து ஆட்சி செய்கிறது. மக்களுக்கும் தொழில் துறைக்கும் ஏதாவது நல்லது செய்தால் நன்றாக இருக்கும்.


காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. திமுகவின் தலைமையில், காங்கிரஸ் கூட்டணி இருக்கும்.  2004இல் 40க்கு 40 வெற்றி பெற்றது போல், இந்த முறையும் திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே அமையும். திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்க உள்ளேன். பாஜகவின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அதனால் காங்கிரஸில் மட்டும் வாரிசுகள் இருக்கிறது என்று கூற முடியாது, 40 பேருக்கும் மேல் வாரிசுகள் பாஜகவிலும் பதவியில் இருக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன்  தெரிவித்தார்.


Also Read: Prime Minister Modi: என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா.. 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி!