தேசியத் தலைநகர் தில்லியில் புதுப்பிக்கப்பட்ட ராஜ்பாத் பாதையின் கண்கவர் திறப்பு விழாவில் நடிகர் கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். கர்தவ்ய பாத் என பெயர் புதுப்பிப்பு செய்யப்பட்டதற்கான நிகழ்வு தேசியத் தலைநகரில் வியாழன் அன்று நடைபெற்றது. வியாழக்கிழமை தேசிய தலைநகரில் புதுப்பிக்கப்பட்ட ராஜ்பாத் - கர்தவ்யா பாதையின் கண்கவர் திறப்பு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு முன் ஊடகங்களிடம் பேசிய கங்கனா, "நேதாஜி அல்லது சாவர்க்கராக இருந்தாலும் சரி புரட்சியாளர்களின் போராட்டம் ஒரு பக்கம் மட்டும் காட்டப்பட்டதால் உண்மை முற்றிலும் மறுக்கப்பட்டது" என்று கூறினார்.


மேலும் அவர் நான் "காந்தியவாதி" அல்ல "சுபாஷ் சந்திரவாதி" என்று கூறினார்.




மேலும் புதிய கர்தவ்யா பாதை திறப்பு விழாவை பாராட்டிய கங்கனா, "இது கடமையின் பாதை, இதனால் பல தலைமுறைகள் முன்னுதாரணமாக நடந்துகொள்வார்கள். ராஜ்பாத் என்ற பெயரை வைத்துக்கொண்டால், அது கடமையை முன்னுதாரணமாக கொண்டு செல்லாது. ஆனால் கர்தவ்ய பாதை கடமையின் பாதை, இது மக்களுக்கு வழிகாட்டும்." என்று அவர் கூறினார். கங்கனாவைத் தவிர, பாடகர் மோஹித் சவுஹானும் கலந்து கொண்டார். செய்தி ஊடகங்களிடம் பேசிய சவுகான், "இது ஒரு பெரிய சமிக்ஞை என்று நான் நினைக்கிறேன். நாட்டிற்காக போராடிய மக்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


முன்னதாக, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தக் கட்டட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று சென்ட்ரல் விஸ்டா என்ற நாடாளுமன்ற வளாகத்தையும், புணர்மைக்கப்பட்ட ராஜபாதையையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அத்துடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் பகுதி வரை இருக்கும் சாலைக்கு ராஜ்பாத் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் பாதையை புணர்மைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருந்தது. அத்துடன் இதன் பெயரையும் மாற்றியமைக்க முடிவு செய்திருந்தது. அதன்படி தற்போது ராஜ்பாத் என்ற பெயரை கடமை பாதை என்று மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதற்கான தீர்மானம் டெல்லி மாநாகராட்சியிலும் நிறைவேறியுள்ளது.  இதை இந்தியில் கர்த்தவ்ய பாத் என்று அழைக்கின்றனர்.


கடமை பாதையில் உள்ள சிறப்பமசங்கள் என்ன?


பழைய ராஜ்பாத் பகுதியை மத்திய அரசு தற்போது சீரமைத்துள்ளது. அதன்படி அந்தப் பகுதியில்  அழகுப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகல், நடைபாதைகள் கொண்ட புல்வெளிகள், பசுமையான இடங்கள், புதுப்பிக்கப்பட்ட கால்வாய்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர நடந்து செல்பவர்களின் வசதிக்காக சுரங்க பாதைகள், மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள் மற்றும் புதிய கண்காட்சி தளங்கள் மற்றும் இரவு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
திடக்கழிவு மேலாண்மை, மழை வெள்ளம் தொடர்பான மேலாண்மை, தண்ணீரை மறுசுழற்ச்சி செய்யும் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் ஆகியவை இங்கு இடம்பெற்றுள்ளன.


சுபாஷ் சந்திர போஸ் சிலை:


இந்தியா கேட் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசின் கிரானைட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒரே கிரானைட் கல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.  அதையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்தச் சிலை 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கை குறிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.