நீட் தேர்வு உயிர் இழக்கும் மாணவர்களுக்கு முழு பொறுப்பு தமிழக முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சரும்தான் என பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் நெசவாளர்கள் தின கருத்தரங்கம் மற்றும் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார். மேலும் வானதி சீனிவாசன் காமாட்சி அம்மன் கோவிலில், டெல்லியில் நிறுவப்பட உள்ள பாரதமாதா சிலைக்கு காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள தோட்டத்தில் மண் எடுத்து சென்றார்.



இதனை அடுத்த செய்தியாளரை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

 

உச்சநீதி மன்றத்தால் கொண்டு வந்த நீட் தேர்வு மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றாக தெரியும். ஆனால், திமுக அரசு தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்து, நீட் தேர்வு ரத்து செய்வோம் தனக்கு ரகசியம் தெரியும் என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவும் இல்லை, நீட் தேர்வுக்கான முறையான பயிற்சியும் கொடுக்கப்படவில்லை.

 

நீட் தேர்வு ரத்து செய்வோம் என திராவிட முன்னேற்றம் கழகம் பொய்யான வாக்குறுதியை கொடுத்து இன்று உயிரிழக்கக்கூடிய ஒவ்வொரு மாணவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் திமுகதான் பொறுப்பு. இதுவரை பொய் வாக்குறுதியை கொடுத்து தமிழக மாணவர்களை தொடர்ந்து முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் ஏமாற்றி வருகின்றன. 



தமிழகத்தில் நிறைய மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கின்றனர். மீண்டும் மீண்டும் பொய் வாக்குறுதியை கொடுத்து தமிழக மாணவர்கள் ஏமாற்ற வேண்டாம் என அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்து கொள்கிறேன். தமிழக மக்களுக்கு திமுக மீது அதிருப்தியும் கோபமும் அதிகரித்து வருகிறது. உயிரிழந்த சடலத்தின் மீது அரசியல் செய்து வருவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நடத்துவது வழக்கம் மற்றும் பாரம்பரியம். ஆகையால் மக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக நீட் தற்கொலையை அரசியல் ஆக்குகிறார்கள்.



தமிழக முதல்வர் மீனவர் மாநாட்டில் மத்திய அரசு மீனவர்களுக்கு இதுவரை மோடி அரசு எந்த நல்ல திட்டங்களும் செய்யவில்லை என பேசினார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சி என்ன செய்தார்கள். அப்பொழுது முதல்வருக்கு நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல் உள்ளது” என்றார்

 

இசைக்கு VIBE ஆனா கல்லூரி மாணவர்கள்

 

முன்னதாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்  வானதி சீனிவாசனை வரவேற்பதற்காக பாஜகவினர் மேளதாள இசை குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் காமாட்சி கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்திருந்தனர். அப்போது மேளதாள இசைக்கும் போது இசைக்கு ஏற்ப கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர் .