பிரபல ரவுடி படப்பை குணா..

 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.



 

இவற்றில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவர் மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். என்னுடையது படப்பை குணா காவல்துறையினர் ,  எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

340 நாட்கள் சிறை ..

 

இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் நில அபகரிப்பு வழக்கிலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த குற்ற வழக்கில் கொலை மிரட்டல் விட்டதாக, இவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் சட்டம் பதியப்பட்டது. படப்பை குணா கைது செய்வதற்கு முன்பு இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், ஒரு ஆண்டு நன்னடத்தை விதியின்கீழ் குற்ற செயலில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டார். இதனால் இவருக்கு 340 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன்

 

 

படப்பை குணாவில் மனைவி எல்லம்மாள் தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட அவர் , அவரை எதிர்த்துப் போர்த்தி விட்ட திமுக வேட்பாளருடன் சம வாக்குகளைப் பெற்று குலுக்கல் முறையில் தோல்வி அடைந்தார். படப்பை குணாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த சமயத்தில், பாரதி ஜனதா கட்சியை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன்,  எல்லம்மாளை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. படப்பை குணா உயிருக்கு பயந்து பாஜகவில் சேர்ந்தார், என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி மௌனம் சாதித்து வந்தது..


மனைவிக்கு பதவி..

 

இந்நிலையில் படைப்பை குணாவின் மனைவிக்கு மாவட்டத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகள் ஒப்புதலுடன், மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்து வரும் கே. எஸ். பாபு  வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில், எல்லம்மாள் குணாவை காஞ்சிபுரம் மாவட்டத்தின் துணைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.