விழுப்புரம் ; அரசு தடை விதித்தாலும் என்னுடைய கல்லூரி பயணங்கள் தொடரும். பெரியார் அண்ணா அரசியலை செய்கிறேன் அதனால் தான் அரசியலை தொழிலாக கருதவில்லை: செஞ்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேச்சு:

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் பகுதியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமானகமல்ஹாசன் கலந்துக்கொண்டுள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன்

வழக்கமாக மாணவர்களிடம் பேசும்போது அரசியல்வாதிகள் பதட்டப்படுவார்கள். ஆனால் நான் என்னையே மாணவனாக கருதிக்கொள்பவன்.நான் மாணவர்களை சந்திக்க வந்திருக்கிறேன். அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை மாணவர்களிடம் நேர்மையாக பேச வேண்டும். நான் கல்வி நிறுவனங்களில் பேசக்கூடாது என அரசு ஆனை பிறப்பித்தார்கள். நான் அண்ணா, பெரியார் அரசிலை செய்கிறேன். அதனால் தான் நான் அரசியலை தொழிலாக செய்யவில்லை. மக்கள் சேவை என்பது ஒவ்வொருவரின் கடமை. வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் கெட்டவர்கள் தான். இனிமேல் மாணவர்கள் தான் பெரியவர்கள். நீங்கள் செல்ல வேண்டிய வழி உங்கள் பாடத்தில் உள்ளது. ஊழல் இருக்கிறது என சொல்லக்கூடாது. அதனை ஒழிக்க நாம் எவ்வளவு பங்காற்றி இருக்கிறோம். அரசியல்வாதி மோசமாக இருக்கிறான் என்றால். கொடுக்கிற கை இருந்தால், வாங்கும் கை இருக்கும்.

Continues below advertisement

அரசியலை கவனிக்கவாவது செய்யுங்கள். திடீர் என ஒருநாள் தலையில் இடி விழும்போது தான் தெரியும். முழு நேர அரசியல்வாதியாக இருந்தால் இன்னும் வெளிப்படையாக பேசியிருப்பேன். முதல்வராக நான் வரவில்லை. 45 ஆண்டுகளாக நான் என்ன செய்தேனோ அதனை செய்வேன்.தேர்தல் அரசியல் செய்ய வரவில்லை. மக்கள் நீதி மைய்யம் நூறு ஆண்டுகள் இருக்கும். மாணவர்கள் அரசியல் பழகுங்கள். அரசியலை கேள்வி கேட்கவில்லை என்றால், அரசியல் உங்களை ஆட்டிப்படைக்கும். இந்தியாவில் ஏழமை பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

நிகழும் அரசியலில் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்கிறேன். நான் விட்டுவிட்டு செல்லும் ஆள் இல்லை. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வருவதிலும் நாங்கள் இருப்போம்.எங்களை தவிற்துவிட்டு அரசியல் இல்லை.எந்த சினிமாவை, எந்த யூடியுபை பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். பரிட்சையில் தேர்ச்சி பெற வைக்கும் விஷயமும் யூடியூபிலும் உள்ளது. என் திரைப்படம் ஓடிடியில் வந்தால் திரைத்துறையே வீனாகிவிடும் என பேசினார்கள்.  ஆனால் இன்றைக்குதிரைத்துறையின் ஊண்றுகோளாக இருப்பது ஓடிடி. தோற்றுவிடக்கூடாது என்பதற்காக கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

ஏ.ஐ பார்த்து பயப்பட வேண்டியதில்லை. ஏ.ஐக்கு நம்மை கெடுக்கும் பலமில்லை. ஏ.ஐ என்பது பெரிய வாய்ப்பு. ஏ.ஐ எல்லா பாடத்திற்கும், எல்லா துறைக்கும் பயன்படப்போகிறது. நான் பேசக்கூடாது என்று சென்ற அரசு தடை போடவில்லை. இந்த அரசு தடை போடாது என நம்புகிறேன். மாணவர்கள் நல்ல அரசியலை பழக வேண்டும். நல்ல அரசியலை தேடிப்போக வேண்டும். நல்ல அரசியல்வாதிக்கு பின்னால் செல்லுங்கள். மந்தையாக சென்றால் இன்னொரு ஆட்டின் வால் தான் தெரியும். எதிர்காலம் தெரியாது. போனை தொலைத்துவிட்டால், வாழ்கையின் அர்த்தம் புரியும். ரீல்சே வாழ்கையாக இருந்தால் வாழ்கை போரடித்துவிடும். என் கல்வி தொடர்வது இந்த தொலைப்பேசியில் தான். மூன்று மணி நேரத்திற்கு மேல் நான் தொலைபேசியை பயன்படுத்தமாட்டேன். ஏ.ஐ ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒரு டம்பளர் தண்னீர் வீனாகிறது.