தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி நினைவு நாணயம் ரூ. 100 இன்று வெளியிடப்படுகிறது. இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவானது, இன்று மாலை 6. 50 மணியளவில் தொடங்குகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவினை, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கலைஞர் நாணயத்தை , மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
வாழ்த்து தெரிவித்த மோடி, ராகுல்:
பன்முகத் திறமை கொண்ட ஆளுமை, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் அவரது முயற்சிகள் இன்னும் மக்களால் நினைவு கூறப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகள் அவருக்கு கலைஞர் என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளதால், கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவர் முன்வைத்த லட்சியங்களை போற்றும் விதமாகவும் இது அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது பண்பு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்கு , முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது, கலைஞரின் சமூகப் பார்வை லட்சக்கணக்கானோரை சுய மரியாதையுடன் வாழ வழி வகுத்தது. கலைஞர் ஆட்சியில், தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்றது
கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு, வாழ்த்து தெரிவித்த அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு நன்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராகுலை அழைக்காதது ஏன்?
இவ்விழாவில், கலைஞர் நினைவு நாணயத்தை பாஜகவைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் வெளியிடுகிறார். மேலும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, நாணய வெளியீட்டு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என கேள்வி என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், ஆளுநர் விருந்தில் திமுக பங்கேற்றதன் மூலம் திமுக - பாஜக இடையிலான உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.