தஞ்சையில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளாரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி சர்ச்சையான வகையில் பேசியதாக தவெக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னைக்கு வந்த தஞ்சாவூர் போலீசார் உதயநிதியை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து சாலை மார்க்கமாக உதயநிதியை போலீசார் தஞ்சாவூர் அழைத்து சென்றனர்.

Continues below advertisement

இதற்கிடையே இன்று காலை நீதிமன்றம் தொடங்கிய நிலையில், நீதிபதியிடம் திமுக வழக்கறிஞர்கள் உதயநிதி கைது தொடர்பாக முறையிட்டனர். அப்போது நீதிபதிகள், இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும், 12 மணி வரை உதயநிதியை கைது செய்ய வேண்டாம் என நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். ஆனால் இந்த உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லையென கூறிய போலீசார் உதயநிதியை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர்.  இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த வழக்கு விசாரணை வந்த போது, உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இனி இந்த வழக்கு ஜாமின் மனு தான் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்றுகொள்ளாத திமுக வழக்கறிஞர்கள்,  ஒரு சில நிகழ்வுகளில் காவல் துறை அத்துமீறல் கைது செய்த நிலையில், நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை மதியம் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜரான போது, உதயநிதியை காவல்துறை நீதிமன்றம் ரிமாண்ட செய்யும் எண்ணம் இல்லையென தெரிவித்தார்.

Continues below advertisement

உதயநிதியிடம் வாக்குமூலம் பெற்று விட்டு காவல் நிலைய ஜாமினில் விடுக்கவிப்போகிறாம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக வழக்கறிஞர்கள் வாதிடுகையில், நாளைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது எனவே இன்றே விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி கூறுகையில், இன்றைய தினமே உதயநிதியை விடுவிக்க வேண்டும் எனவும்,வழக்கு விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.