Jayalalitha 5th Year Memorial LIVE: | ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

Jayalalitha 5th Year Memorial LIVE Updates: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு தினம் இன்று

ABP NADU Last Updated: 05 Dec 2021 12:53 PM
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.சசிகலா தலைமையில் தொண்டர்கள்  உறுதிமொழி ஏற்றனர். 

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக - அமமுகவினர் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு தினம் இன்று  

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு தினம் இன்று. இதையொட்டி, அதிமுகவினர் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்


Background

அம்மா.. தங்கத்தாரகை.. இரும்பு மனுஷி.. புரட்சித் தலைவி என அனைத்து மக்களாலும் அன்போடு அழைக்கப்படுவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதிமுக எனும் கோட்டையை நிறுவியர் எம்.ஜி.ஆர் என்றால் அதை இரும்புக்கரம் கொண்டு கட்டி காத்தவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


ஜெயலலிதா எனும் ஆளுமை 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி


ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனது அசாத்திய நடிப்பால் கலைச்செல்வி என்ற பட்டத்தை தட்டிச்சென்றதோடு ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார். 


ஜெயலலிதா இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் முதலமைச்சராக பணிபுரிந்தார். 


2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி சிகிச்சைப்பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.