விழுப்புரம் : இந்தியாவிலேயே ஆளுநருக்கு சவால் விட்ட முதலமைச்சராக  ஸ்டாலின் உள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் 41 ஆயிரம் பெண்கள் காணவில்லை என புள்ளி விவரம் கூறுகிற நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் கூறுவது ஏற்கதக்கது அல்ல எனவும் துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தலைமையில் இரண்டாண்டு திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை சபா நாயகர் பிச்சாண்டி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில், அண்ணா பெரியார் கருணாநிதி போன்றோர்கள் அரும்பாடுபட்டதாகவும், ஒரு ரூபாய்க்கு அரிசியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்ததால் தான் இன்று இலவச அரிசி வழங்கபடுகிறது என்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை  கொண்டு வந்ததால் தான் இந்தியா முழுவதும் பெண்கள் பயனடைவதாக தெரிவித்தார். கருணாநிதி வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கியதால் தான் இன்று பல்வேறு வீடுகளில் வண்ண தொலைக்காட்சிகள் உள்ளன.


கொரனோ காலத்தில் ஒரு ரூபாய் கூட வழங்காமல் பிரதமர் கைதட்டவும் விளக்கேற்றவும் கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரனோ நிவாரணமாக குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டதாகவும் இந்தியாவிலையே விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்தது தமிழக அரசு தான் என்றும் காலை உணவு திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளதாக கூறினார். பத்து வருட அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவில்லை ஆனால் திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளில்  ஒன்னரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ளதாகவும் மேகாலய மாநிலத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளபோது பிரதமர் அங்கே செல்லாமல் கர்நாடகவில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதாக குற்றச்சாட்டினர்.  இந்தியாவிலையே ஆளுநருக்கு சவால் விட்ட முதலமைச்சராக  ஸ்டாலின் உள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் 41 ஆயிரம் பெண்கள் காணவில்லை என புள்ளி விவரம் கூறுகிற நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் கூறுவது சரியல்ல எனவும் அரசியலமைப்பு சட்டத்தில் கூறுவது படி ஆளுநர் நடந்து கொண்டால் போதும் என தெரிவித்தார்.


வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்கும் நல்லது செய்யும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும் அதிமுகவில் சாதாரணமான தொண்டன் கூட முதல்வராக ஆகலாம் என கூறுகிறார்கள் ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அருகில் எடப்பாடி பழனிச்சாமி அமர மறுக்கிறார்கள். இதில் மக்களை ஏமாற்றுகிற கட்சியாக செயல்படுகிறார்கள் என்பதும் அதிமுக ஊழல் கட்சி என்பதால் தான் ஜெயலலிதா, சசிகலா, போன்றோர்கள் சிறை தண்டனை பெற்ற கட்சியாக இருந்துள்ளது. அக்கட்சியில் பதவி சண்டை தான் நடைபெற்று வருவதாக சாடினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண