சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், திடீரென நடைபெறும் இந்த வருமானவரித்துறை சோதனை தி.மு.க., ம.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் கயல்விழி போட்டியிடுகிறார். இதோ தொகுதியில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.