இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநில நிர்வாகிகள் குழு மற்றும் மாநில குழு கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "மோடி தலைமையிலான அரசு மக்கள் மீது நம்பிக்கையில்லாத சர்வாதிகார அரசாக அமைந்துள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ரவி அரசு விதிமுறைக்கு நேர்மாறாக செயல்பட்டு வருகிறார். சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் மாணவர் தற்கொலை, மகன் உயிரிழந்த சோகத்தில் அவரது தந்தையும் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதை தற்கொலை என்று கூற முடியாது தற்கொலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்று தான் கூற வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகரித்துவிட்டது. குறிப்பாக நீட் தேர்வு மையத்தை வைத்து நடத்துபவர்கள் தான் அதிகம் கொள்ளையடிக்கிறார்கள்.



பாஜக எத்தகைய பாதக செயல்கள் செய்தாலும் அமலாக்கத் துறையில் இயக்குனரை போட்டதில் இருந்தால் பிரச்சனை ஆரம்பித்துள்ளது அமலாக்கத்துறை செயலாளர் பதிவு காலத்தை தொடர்ந்து மத்திய அரசு நீடித்துக் கொண்டு வருகிறது. மத்திய அரசு உத்தரவிற்கு அடிமையாக செயல்பட்டு வருவதால் தான் அவரைத் தொடர்ந்து இயக்குனராக நீடித்து வருகிறார். அமலாக்கத்துறை பாஜக மட்டும் ஆர்எஸ்எஸ் அடிமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்திய அமைப்பை உருவாக்கியது இதை உடைக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனை நாடகங்கள் நடந்தாலும் அதை உடைத்து வெற்றி பெறுவோம். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கையில திட்டம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றால் உடனே எழுத்தில் விடுவார். மத்திய அரசு எவ்வளவு அவமானப்படுத்தினாலும் அதை துடைத்து விட்டு தொடர்ந்து கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் வேண்டுமென்று அரசியல் பேசுவதற்காக பேசி வருவது அர்த்தமற்றது. கச்சத்தீவு, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு தான். நீட் தேர்வு ரத்து தீர்மானத்தில் கையெழுத்து இட மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தான் அதிகளவில் நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை அதிகளவில் நிகழ்ந்தது.



7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததை நாங்கள் வரவேற்றுள்ளோம் அது மட்டுமே தீர்வாகாது. நீட் தேர்வு ரத்து மத்திய அரசை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. தேவையற்ற பிரச்சினைகளை வளர்ப்பதற்காக தான் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். மணிப்பூர் விவகாரம் பற்றி பேச கூறினால், ஜெயலலிதா விவகாரம் குறித்து பேசி முடிந்து போன விவகாரத்தை பேசுவதைவிட்டு மன்னிப்பு விவகாரத்தை பேச வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நடவடிக்கை குறித்தும் அங்கு ஏன் செல்லவில்லை என்பது குறித்தும் பேசி இருக்க வேண்டும். அதை விட்டு ஜெயலலிதா விவகாரம் பற்றி பேசுவது தேவையற்றது. அண்ணாமலை பாதயாத்திரை பாதையில் நின்று மீண்டும் நடைபெற்று வருகிறது. அவர் நடை பயணத்தால் தமிழக மக்களுக்கும் பாஜக கட்சிக்கும் எந்த பயனும் இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் அமைதி நிலை நாட்டுங்கள் மோதல் வேண்டாம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாதியிலேயே சென்றால் நன்றாக இருக்கும். அவர் செல்வது பாதயாத்திரை செல்லவில்லை குளிர்சாதனம் பொருத்திய பஸ் யாத்திரை நடத்தி வருகிறார்” என்று கூறினார்.