Anbumani: ’’தலைவர் நான்தான்’’ பந்தக்கால் நட்டு பாமக மாநாட்டை தொடங்கிவைத்த அன்புமணி!

தொடர்ந்து செய்தியாளர்கள் அன்புமணியிடம், என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

Continues below advertisement

என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக உள்ளதா என்ற கேள்விக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளிக்க மறுத்துள்ளார். குறிப்பாக, பின்னர் பதிலளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சித்திரை முழு நிலவு மாநாடு

வரும் மே 11ஆம் தேதி அன்று பாமக சார்பில் வன்னியர் இளைஞர் பெருவிழா சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்வுக்கு, பந்தக்காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நட்டு வைத்தார். இதில் நவதானியங்கள், பால், கலச நீர் ஊற்றப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.

தொடர்ந்து அவர் பேசும்போது, ’’மருத்துவர் ராமதாஸ்வழிகாட்டுதலில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. வன்னியர் சங்கம் நடத்தும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பின் தங்கிய மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். 

இந்த மாநாட்டின் மூலம் சமூக நீதியை வென்றெடுக்க லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளனர். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும் வன்னியர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிற பின் தங்கிய சமுதாயங்கள் அனைவருக்கும் அவரவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்தார்.

பதிலளிக்க மறுத்த அன்புமணி

தொடர்ந்து செய்தியாளர்கள் அன்புமணியிடம், என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார். அதே நேரத்தில், ’’இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பின்னர் பதிலளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையில் முரண் நிலவுவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola