- அனைத்து பல்கலை. துணை வேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடக்க உள்ளது
- தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக பின்பற்ற அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு - அரசாணைகள் தமிழில் மட்டுமே இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்
- அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாததால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
- நெல்லை: பள்ளியில் சக மாணவனை அரிவாளால் தாக்கிய மாணவன், விசாரணைக்குப் பிறகு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு உரிய கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு
- தங்கம் விலை மீண்டும் 70 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு கிரம 8 ஆயிரத்து 815 ரூபாய்க்கு விற்பனை
- திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடலில் மூன்றாவது நாளாக இன்றும் 50 அடி உள்வாங்கிய கடல். பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.
- தமிழ்நாடு அரசிடம் ஊதியம் பெறப் போவதில்லை - தமிழ்நாடு அரசு அறிவித்த உயர்நிலைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்
- மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் என்பவர் போலீசாரால் கைது
- திருவாரூரில் கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ் காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட நகராட்சி கட்டட ஆய்வாளர் நாகராஜனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- புழல் சிறையில் கண்காணிப்புக் கோபுரம் அருகே தூய்மை பணியின்போது புதரில் கிடந்த பொட்டலதில் இருந்து 1 செல்போன் மற்றும் 39 கிராம் கஞ்சா பறிமுதல். சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை
- ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி பாடத்தை எழுதிவிட்டு மாயமான 5 மாணவிகளும் திருச்சியில் மீட்பு
- சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு