மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் பேசியதாவது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசத் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக , விதி எண் 267இன் படி விவாதம் நடத்த ஏன் தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பினர். மேலும், குடியரசுத் தலைவரிடம், ‘ மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கவில்லை. மணிப்பூர் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு முகாம்கள் சிறப்பான முறையில் இல்லை எனவும் குடியரசுத் தலைவரிடம் கூறியதாக’ கூறினர். இந்தியா கூட்டணி சார்பில் தலைவர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 31 எம்.பிகள் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர்.