M.G.R Statue: தலைநகரில் பரபரப்பு.. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு: சிவப்புச்சாயம் பூசிய மர்ம நபர்கள்!

அதிமுக நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ஆர் சிலை மர்ம நபர்களால் சிவப்பு சாயம் பூசி அவமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

அதிமுக நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ஆர் சிலை மர்ம நபர்களால் சிவப்பு சாயம் பூசி அவமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னை ராயபுரம் காளிங்கராயன் தெருவில் உள்ள  முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலைக்கு இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி காலையில் சிவப்பு கலர் பெயிண்டை ஊற்றி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட, அதிமுகவினர் அப்பகுதியில் கூட ஆரம்பித்ததால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலையை துணியால் மூடி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு இன்னும் சிறுது நேரத்தில் சென்று பார்வையிட்டார்.


சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்து தொண்டர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார். அதன் பின்னர் தொண்டர்களுடன் இணைந்து எம்.ஜி. ஆர் சிலைமீது பூசப்பட்டிருந்து சிவப்பு நிற பெயிண்ட்டை துடைத்தார்.  ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola