நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தற்போது சொல்வதிற்கில்லை என்று ஐஜேக மாநில தலைவர் ரவிபச்சமுத்து கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளியில் அவர் பேட்டியளித்தாவது:
கடந்த சில நாட்களுக்கு முன் வந்த மாண்டஸ் புயல் பாதிப்பில், தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. புயல் காரணமாக கீழே விழுந்த மரங்களை உடனடியாக அகற்றினார்கள். சென்னையில் கனமழையின் போது கடந்த காலங்களை போல் தண்ணீர் தேங்காமல், நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போதும், மாண்டஸ் புயலின் போதும், தண்ணீர் தேங்கிய பகுதிகளில், உடனடியாக தண்ணீரை மின் மீட்டர் வைத்து அகற்றி துரித நடவடிக்கை எடுத்தார்கள்.
வருகின்ற நாடளுமன்ற தேர்தலில், ஒரு சில பகுதிகளில் முக்கிய பிரச்சினைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்யவுள்ளோம். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரி வேந்தர், கொரோனா காலத்தில் அரசின் நிதி கிடைக்காத போதும், தனது சொந்த நிதியை வைத்து தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தற்போது கட்சியை வளர்க்கும் பணியில் ஐஜேக ஈடுபட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தற்போது சொல்வதிற்கில்லை. நாங்கள் யாரையும் குறை செல்லவில்லை. இளைஞர், நடுத்தர வர்க்கத்திற்கு எப்படி வழிகாட்டியாக இருக்கப் போறோம் என்பதுதான். அரசு மக்களுக்கு தேவையான நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவத்தை கொடுக்க வேண்டும் என ரவி பச்சமுத்து தெரிவித்தார்.