சேலத்தில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ”திமுக ஆட்சி பற்றி குறை சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி, யார் ஆட்சியில் இருக்கும் போது மதுபானங்கள் விலையேற்றம் நடைபெற்றது அதேபோன்று அதிமுக ஆட்சியில் எத்தனை கடைகள் மூடப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி அமைச்சராக இருந்தபோது பாட்டிலில் கூட கொள்ளை அடித்தார்கள். மதுக்கடைகளை மூடச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டது? என கேள்வி எழுப்பினர். கொரோனா காலத்தில் மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடத்தியது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். இன்று ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக உள்ளது எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், டாஸ்மார்க் மூலம் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாக கூறினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி பேசுவதை வேடிக்கை பார்த்து வருகிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி ஊழல் செய்ததற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.
தற்போது திமுகவில் உள்ள தமிழக முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான காரணம் என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி நிரபராதி, தவறு செய்யவில்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக முதலமைச்சருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அண்டர்ஸ்டாண்டிங் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதைப்பற்றி சொல்லுங்கள் நாட்டு மக்களும் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
கோடநாடு வழக்கு முதல் பல்வேறு வழக்குகள் உள்ளது இதுவரை எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கப்படவில்லை, மேலும் முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அது குறித்து நடவடிக்கை இதுவரை இல்லை. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீது நம்பிக்கை போய்விட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டி இருப்பார்கள். அடுத்த பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி தான், குற்றவாளி பிரதமராக போகிறார். தமிழக முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜி காப்பாற்ற முயற்சி செய்யவேண்டாம், டெல்லிக்கு சென்றால் பாஜக கொடியுடன் திரும்பி வருவார். கோடநாடு கொலை வழக்கு முதல் ஊழல் குற்றச்சாட்டுகள் வரை கைது செய்யப்படாமல் எடப்பாடி பழனிசாமி பாதுகாத்து கொண்டிருப்பது திமுகதான் சிறைக்கு அனுப்பாமல் இருப்பதாக கூறி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.
”கோடநாடு கொலை வழக்கு சயனை எடப்பாடி பழனிசாமிதான் அனுப்பி வைத்தார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தும் ஏன் நடவடிக்கைகளை எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு காவல்துறை எடப்பாடி பழனிச்சாமி இடம் நெருங்காது அதிமுக அடித்துக் கொண்டு சாகட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக ஒன்றுசேர்வில்லை என்றால் திமுகவிற்கு தேர்தலே தேவையில்லை வெற்றி பெற்றுவிடும் என்றார். திமுக அதிமுக ஒற்றுமை பலமாக உள்ளது. இவர்கள் பேசி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். கோடநாடு கொலை நடந்த அன்று காவல்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என யாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. அதேபோல் அந்தப் பகுதியில் மின்சாரம் தடையில்லாமல் இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கூறியுள்ளார். ஆனால் கொலை நடந்த அன்று மின்சாரம் எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்றார். இது அனைத்தும் புதிராக உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்” என்று கூறினார்.