ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே கூறினேன்:


நில அபகரிப்பு புகார் வழக்கில் ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே கூறினேன், யார் என்று கூறவில்லை என ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 


ஓபிஎஸ்-ஐ ஓரம் கட்டும் எண்ணம் இல்லை:


 ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம், அவசியம் என்பது மாவட்ட செயலாளர்கள் மூலம் பிரதிபலித்துள்ளது. மேலும் இவர்தான் தலைவர் என்று நான் சொல்லவில்லை, அதை பொதுக்குழு முடிவு செய்யும். நான் கட்சி பக்கம், கட்சிதான் முக்கியம் என்றும், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண