"எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொன்னதாக தவறான செய்தியை பரப்பிய, ஊடகங்களை கண்டிக்கிறேன் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா காட்டமாக பதில் அளித்துள்ளார்."
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மணமக்களை கேப்டன் சார்பிலும் தேமுதிக சார்பிலும் மணமக்களை வாழ்த்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய தேமுதிக சார்பில் நடைபெறும் உள்ளம் தேடி இல்ல நாடி மக்களை தேடி மக்கள் தலைவர் என்கிற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
"நான் சொல்லாதது செய்தியாக வருகிறது"
நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில், கூட்டணியை பற்றி அறிவிப்பு செய்வேன் என தெரிவித்தார். நான் சொல்லாததை செய்தி வருகிறது. அதை நான் கண்டிக்கிறேன் நான் சொல்வதை தவறாக செய்தியாளர்கள் செய்தியை போடுகிறார்கள். எங்கள் கட்சி நிர்வாகிகள் இடம் பேசுவதை நான் பேசியதாக போடுவது தவறு என தெரிவித்தார்.
நான் அண்ணன் எடப்பாடியை நான் முதுகில் குத்தி விட்டார் என தவறாக நான் சொன்னதாக தவறான செய்தியை ஊடகங்கள் பரப்பி உள்ளது. கண்டனத்திற்குரியது நாங்கள் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் எது வேண்டுமானாலும் பேசுவோம். அதை நான் சொன்னதாக செய்தியை பரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் கண்டனம்.
"இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்"
மேல்மருவத்தூரில் இருந்து சொல்லுகின்றேன் நான் எடப்பாடி அண்ணனை அப்படி சொல்லவில்லை. தினந்தோறும் நான் சுற்று பயணத்தின் போது என்னை சந்திக்கும் செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
இப்படி நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டேன் எனவும் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அதை அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார். இவர்களுடன் தேமுதிக பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.