Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!

Prashant Kishor: பிராசாந்த் கிஷோருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்விகள் எழுந்த வந்த நிலையில் , பொதுமேடையில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தனது தேர்தல் வியூக ஆலோசனையினால், தற்போது 10 மாநிலங்களில் உள்ள அரசாங்கங்கள் தனது தேர்தல் உத்திகளில் வெற்றி பெற்று இயங்குகின்றன என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

பீகார் இடைத்தேர்தல்:

பீகார் மாநிலத்தில்  4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலானது வரும் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது, நவம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், “தனது பிரச்சாரங்களுக்கு எவ்வாறு பிரசாந்த் கிஷோர் நிதி பெறுகிறார் என்று மக்கள் அவரிடம் அடிக்கடி கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலும் , இவர் தேர்தல் நிதி தொடர்பாக , பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி பேசி வந்தனர்.

”குறைந்தபட்சம் 100 கோடி ”:

இந்நிலையில் பீகார் இடைத்தேர்தல் தொடர்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் இருந்த பிரசாந்த் கிஷோர்,  பீகாரின் பெலகஞ்சில் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசுகையில், “  என்னுடைய பிரச்சாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? பீகாரில், என்னுடைய கட்டணத்தைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை. 

தேர்தல் வியூக ஆலோசனைக்காக, ஒரு தேர்தலுக்கு  குறைந்தபட்சம் ரூ.100 கோடி வசூலித்தேன். பீகார் முழுவதிலும் தனக்கு நிகரான கட்டணத்தை யாரும் வாங்கியதில்லை. நான் வகுத்த  தேர்தல் உத்திகளினால் கிட்டத்தட்ட 10 மாநிலங்களின் அரசாங்கம் இயங்குகிறது என தெரிவித்தார்.  

அக்டோபர் 2 ஆம் தேதி, பிரசாந்த் கிஷோர் தனது புதிய அரசியல் கட்சியான “ஜன் சூராஜ் கட்சியை” அதிகாரப்பூர்வமாக பாட்னாவில் தொடங்கினார். கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்றதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.  
 
பீகாரில் 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது, 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும், அதில் 40 பெண் வேட்பாளர்கள் இருப்பார்கள் என்றும் பிரசாந்த் கிஷோர் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஒரு தேர்தல் ஆலோசனைக்கு குறைந்தது 100 கோடி ரூபாயா என மக்கள் பலர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola