திருவள்ளூர் மணவாள நகரில் அமைந்துள்ள புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள்  சிறுவர் எழுச்சி மன்ற மாநில செயலாளருமான சீனிவாசன், தாயார் பரிபூரணம் அவர்களின், 16 ஆம் நினைவேந்தல் படத்திறப்பு விழாவிற்கு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 



 

இதனை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது,

திருவள்ளூர் மாவட்டம்  கிராமத்தில் ஆதிதிராவிட பொது மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், தீண்டாமைச் சுவர் எழுப்ப பெற்று பல ஆண்டுகளாக சிக்கலில் உள்ளது. சுவருக்கு அப்பால் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு, இவர்களில் வந்துவிடக்கூடாது, நடக்கிற விழாக்களுக்கு தலித்துகளின் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் ஒரு சிலர் திட்டமிட்டு அந்த சுவர் கட்டி இருக்கிறார்கள். அதை இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அக்கிராமத்தில் ஆதிதிராவிட பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது இந்த அரசுக்கு களங்கம் விளைவிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆகவே தொக்கனூர் தமிழக அரசு உடனடியாக, இதில் தலையிட வேண்டும் அந்தச் சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.



 

நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளித்து இருக்கிறோம். இது வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி அல்ல குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி, இது பிஜேபி சங்பரிவார் என்கிற வெகு மக்கள் விரோத பாசிச அமைப்பின் கருத்துக்கு அல்லது கோட்பாட்டுக்கு எதிரான ஒரு போராட்டம் தான் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இருக்கிற போராட்டம்.  இது யுத்தம் அல்ல,  இது சனாதன சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான போட்டி. எனவே எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட இருக்கிற யஷ்வந்த் சின்காவை அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான ஒரு பிரதிநிதியாகவே வேட்பாளராகவே எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்துவோம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

 

குதிரைபேரம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அசாம் போன்ற பகுதிகளில், கவுகாத்தி போன்ற இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் மராட்டியவில் நடக்கிற அரசியல் சித்து விளையாட்டு அனைத்தும் பாரதிய ஜனதா மற்றும் சங் பரிவார் அமைப்புகளால் இயக்கப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.



 

அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்னை எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், இரட்டை தலைமை கூட்டுத் தலைமை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவுக்கு பாஜக தலைமை கூடாது அது அதிமுகவுக்கும் நல்லதல்ல தமிழகத்திற்கு நல்லது. வேலை வாய்ப்பு தேடி போக எந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக அமைகிறது என்பதையும் உணர்ந்து இளைஞர்கள் போராடுகிறார்கள்.  யாரும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று சுருக்கி பார்த்துவிட முடியாது அது பெரும்பான்மை இந்து இளைஞர்களை இந்துக்களின் பாதுகாப்பு அரண், என்று பாஜக அரசை சொல்லிக்கொள்கிற இந்த வகையில் அந்த பாஜக அரசுக்கு எதிராக இந்துப் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தான், போராடுகிறார்கள். இந்த அரசு இந்து மக்களுக்கு விரோதமான அரசு என்பதை புரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.