கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் சமூக இடைவெளியின்றி நடந்து வருவதாகவும், எனவே பிரசாரத்திற்கு தடைவிதிக்க கோரி ஜலாலுதீன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் , ‛ஏற்கனவே பிரசார நடைமுறைகள் துவங்கிவிட்டதால் இனி தடை விதிக்க முடியாது என்றும் அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரசாரத்தை மேற்கொள்ள உத்தரவிட்ட அமர்வு, ஜலாலுதீன் தாக்கன் செய்த மனுவை முடித்து வைத்தனர்.
பிரசாரத்திற்கு தடை; உயர்நீதிமன்றம் மறுப்பு
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 22 Mar 2021 12:51 PM (IST)
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து அது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.
high_court