தேர்தல் களத்தில் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழ கூட்டத்தில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்காக ருசியான உணவுகள் சுடச்சுட தயாராகி வருகிறது. அந்த வகையில் காலையில் இட்லி, பொங்கல் முதல் மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வரை உணவுகள் ரெடியாகிவருகிறது.
காலை உணவு 3000 பேருக்கும், மதிய உணவு சைவத்தில் 2000 பேருக்கும், அசைவத்தில் 8000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுவருகிறது. இன்று சுடச்சட தயாராகி வரும் உணவுகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
காலை உணவு
கேசரி.வடை, பொங்கல்,இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வாட்டர் பாட்டில் காபி மற்றும் டீ வழங்கப்பட்டு வருகிறது.
மதியம் சைவ உணவு பட்டியல்
1) தம்ஃப்ரூட் அல்பா2) புடலங்காய் கூட்டு3) சைனீஸ் பொரியல்4)மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி5) பிளாக்காய், உருளை மசாலா6) பருப்பு வடை7) அப்பளம்8) ஊறுகாய்9) மோர் மிளகாய்10) வெஜ் பிரியாணி -தயிர் பச்சடி11) சாதம்12) கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார்13) வத்தல் குழம்பு14) தக்காளி ரசம்15) தயிர்16) பருப்பு பாயாசம்17) வாட்டர் பாட்டில்18) வாழைப்பழம்
மதியம் அசைவ உணவு பட்டியல்
1. பிரட் அல்வா2. மட்டன் பிரியாணி3. தாளிச்சா4. ஆனியன் தயிர் பச்சடி5. கத்திரிக்காய் கட்டா6. மட்டன் குழம்பு7. சிக்கன் 658. வஞ்சரை மீன் வருவல்9. முட்டை மசாலா10. வெள்ளை சாதம்11. தக்காளி ரசம்12. தயிர்13. இஞ்சி புளி மண்டி14. பருப்பு பாயாசம்