வேளாண் துறை வளர்ச்சிக்காகவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும்  ரூ.14,000 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய அறிவிப்புகள் பற்றிய விவரஙக்ளை இங்கே காணலாம்.


நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 2020-ல் மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்தஙக்ளை அறிமுகம் செய்தது. இதற்கு எதிராக போராட்டம் வலுத்தது. குறிப்பாக, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் அதிருப்தி  எழுந்த நிலையில், நவம்பர்,2021-;  இந்த சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டது.


இந்நிலையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறை வளர்ச்சிக்காகவும் விவசாயிகளின் வருவாய் அதிரிப்பதை நோக்கமாக கொண்டு ரூ.14,000 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.14,235.3 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட உள்ள 7 வேளான் திட்டங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டது. புதிய 7 திட்டங்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.


டிஜிட்டல் வேளாண்மை மிஷன்


டிஜிட்டல் வேளாண்மைக்கு ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் டிஜிட்டல் வேளாண்மை திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் செயல்திறன் மற்றும் உற்பத்தி திறன் மேம்படும். இதன் மூலம் வேளாண்  துறையை நவீனமயமாக்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை நேரடி கொள்முதல் செய்பவர்களுடன் டிஜிட்டல் முறையில் இணைப்பதன் மூலம் இடைத்தரகர்களின் பங்கேற்பை குறைக்க இந்த திட்டம் உதவும். விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாக இந்த புதிய முயற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு


உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான பயிர் அறிவியல் திட்டத்துக்கு ரூ.3,979 கோடி ஒதுக்கப்படும். வேளாண் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்த இந்த அறிவிப்பு உதவும் என்று  பயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிப்பது, அனைவருக்கும் சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். பருவநிலை மாறுபாடு, பேரிடர் காலங்களில் பயிர், உணவுகள், எதிர்கால உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டற்றை ஆராய்ந்து தீர்வு காணும் எதிர்கால முயற்சிகளுக்கு  இந்த அறிவிப்பு உதவும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.


வேளாண்மை கல்வி மேம்பாடு


வேளாண்மை கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை பலப்படுத்த ரூ.2,291 கோடி ஒதுக்கப்படும். நாடு முழுவதும் வேளாண்மை கல்வி மற்றும் மேலாண்மை திட்டங்களின் வளர்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தை வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திட்டத்திற்காக ரூ.1,702 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை விவசாயிகளை ஆதரிப்பதுடன் அவர்களுக்கு நம்பிக்கை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. 


நிலையான கால்நடை சுகாதாரம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த ரூ.1,702 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடை சுகாதார மேலாண்மை, கால்நடை கல்வி, கால்நடை மற்றும் பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். 


 நிலையான தோட்டக்கலை வளர்ச்சிக்காக ரூ.1129.30 கோடி ஒதுக்கப்படும். தோட்டக்கலை பயிர்களின் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், காளான், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்.


வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் கிரிஷி விஞ்ஞான் கேந்திரா வலுப்படுத்த ரூ.1,202 கோடி ஒதுக்கப்படும். இயற்கை வள மேலாண்மை,  இயற்கை வளங்களை நிலையாக பயன்படுத்துவதற்கு  ரூ.1,115 கோடி ஒதுக்கப்பட உள்ளது.